ரிஷப ராசி அன்பர்கள்…!! இன்று நீங்கள் பொழுதுபோக்காக பேசுபவர்களிடம் விலகியே இருங்கள். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திருப்திகரமான அளவில் பணவரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். இன்று எதிர்ப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. பல வகைகளில் இன்று நன்மை நடக்கும். தெய்வபக்தி கூடும். ஆன்மீகத்தில் மட்டும் சிறிய தொகையை செலவிட நேரிடும். அதேபோன்று அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அன்பாக நடக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அது போன்று பஞ்சாயத்துக்களில் கருத்துக்கள் சொல்ல வேண்டாம். இன்று நிதானதுடன் நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களுடன் உரையாடும் போது தேவையில்லாத விஷயங்கள் பற்றி விவாதிக்க வேண்டாம். அதேபோன்று பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு கடுமையான முயற்சிகளையும் எடுக்க வேண்டாம். வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். காதலர்கள் இன்று மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள். இன்று புதிதாக காதலில் வயப்பட கூடிய சூழலும் உள்ளது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு
அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்