சிம்ம ராசி அன்பர்கள்…!!சிம்ம ராசி அன்பர்கள்…. இன்று எல்லாரிடமும் சாந்தமாக பேசவேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை மிகவும் சிறந்த அளவில் இருக்கும். பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வெகு நாள் காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். புதிய முயற்சிகள் அனைத்தும் கைகூடும் எதிர்ப்புகள் குறையும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். அதுமட்டுமின்றி வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுப்பீர்கள். காதலர்களுக்கும் இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாகவே இருக்கும். இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும் நாளாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் . அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு குரு பகவானை வழிபடுவதால் காரியங்கள் அனைத்தையும் ரொம்ப நன்மையாகவே நடத்திக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு
அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் நீல நிறம்