Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அழகாக இருக்கலாம்… மதுபோதைக்கு அடிமையான மனைவி… நள்ளிரவில் கழுத்தை நெரித்து கதையை முடித்த கணவன்… அதிரவைத்த வாக்குமூலம்..!!

மனைவி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகராஜ் முருகவள்ளி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகவள்ளி நேற்று வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முருகவள்ளியின் கணவன் மற்றும் குழந்தைகள் அங்கு இல்லாததை அறிந்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். இதனிடையே முருகவள்ளியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகவள்ளியை காதல் திருமணம் செய்து கொண்ட கணவன் சண்முகராஜ் தான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் பின்னர் குழந்தைகளுடன் தலைமறைவானது தெரியவந்தது.

ஊரடங்கினால் வாகன வசதி இல்லாத காரணத்தால் நடந்தே வெளியூர் செல்ல முயன்ற சண்முகராஜ் மற்றும் குழந்தைகள் காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். சண்முகராஜ் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில், ஊரடங்கு காரணத்தினால் வீட்டிலேயே இருக்கும் சூழல் உருவானது. இதில் தனது மனைவி குடிப்பழக்கத்திற்கு அடிமையான தெரியவந்தது. அழகாக இருப்பதற்கு ஓட்கா அருந்தினால் போதும் என பக்கத்து வீட்டு பெண்களுடன் சேர்ந்து ஆரம்பித்த பழக்கம், தற்போது முழுமையாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.

வீட்டு செலவிற்கு கொடுக்கும் பணம் போக அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியும் முருகவள்ளி குடிக்க தொடங்கியுள்ளார். இதில் கோபம் கொண்ட சண்முகராஜ் முருக வள்ளியிடம் தகராறு செய்ய, அதற்கு தினமும் மது அருந்துவதற்கு பணம் தரவேண்டும் இல்லையென்றால் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுவிடுவேன் என முருகவள்ளி மிரட்டியுள்ளார். இந்நிலையில் சண்முகராஜ் குழந்தைகள் இருவரையும் உறவினர் வீட்டில் விட்டு விட்டு கடந்த திங்கள்கிழமை தனது மனைவிக்கு அவர் விரும்பிய ஓட்காவை வாங்கிக் கொடுத்துள்ளார்.

மது அருந்திய போதையில் நன்றாக முருகவள்ளி உறங்கிக் கொண்டிருக்க, அரை போதையில் இருந்த சண்முகராஜ் நம்மை மனைவி கொள்வதற்கு முன் நாம் அவரை கொன்று விட வேண்டும் என சிந்தித்து முருகவள்ளியின் கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனிடையே பிரேத பரிசோதனை முடிந்து வந்த சடலத்தை ஜாதி மாறி காதல் திருமணம் செய்த காரணத்தினால் பெற்றோர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.

Categories

Tech |