Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மிகவும் கஷ்டப்பட்ட தாய்… கொலை செய்த மகன்… அதிர்ச்சி வாக்குமூலம்..!!

கை, கால்கள் செயலிழந்து துயரப்பட்டு வந்த தாயை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் ஆனந்தன். தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் இவரது தாய் கோவிந்தம்மாள் சில வருடங்களாக கை கால்கள் செயல் இழந்து மிகவும் துயரப்பட்டு வந்துள்ளார். தாய் மீது அதிக பாசம் கொண்ட ஆனந்தன் அதிக அக்கறை எடுத்து தாயை கவனித்துக் கொண்டார். ஆனால் ஆனந்தனுக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் அவரது மனைவிக்கு இது கோபத்தை கொடுத்துள்ளது.

இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இருவர் இடையே ஏற்பட்ட தகராறினால் ஆனந்தனின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஆனந்தன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அதோடு கை கால்கள் செயலிழந்து தாய் அவதிப்படுவதை பார்க்க முடியாமல் துயரத்தில் இருந்து வந்தவர் தனது தாயை கொலை செய்ய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த தாய் கோவிந்தம்மாளை கழுத்தை அறுத்து ஆனந்தன் கொலை செய்தார்.

கோவிந்தம்மாள் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது அவர் உயிரிலிருந்து கிடைக்க காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கோவிந்தம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு ஆனந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |