குழந்தையை பார்க்க விடாத கோபத்தில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர்மெரின் ஜாய். இவர் அமெரிக்காவில் இருக்கும் ப்ரோவ்ர்டு ஹெல்த் கோரல்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பணிக்கு சென்றுவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மெரின் மர்ம நபர் ஒருவர் கொடூரமாக பல முறை கத்தியால் குத்தியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மெரினை கத்தியால் குத்தியது மேத்யூ என்ற அவரது கணவர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறை துணைத் தலைவர் கூறுகையில் மருத்துவமனையை விட்டு வெளியே வந்த மெரினை அந்த நபர் பலமுறை கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளார். உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் அந்தப் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. 2019ஆம் ஆண்டு இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் குழந்தை தாயின் அரவணைப்பிலேயே இருந்துவந்துள்ளது.
இதனால் குழந்தையை பார்ப்பதற்கு மேத்யூ மெரின் மற்றும் அவரது தாய் அனுமதிக்கவில்லை. ஆனால் மனைவி மற்றும் மகள் மீது அளவுகடந்த பாசம் கொண்ட மேத்யூ குழந்தையை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று ஒருபோதும் குழந்தையை பார்க்க முடியாது என மெரின் கூறியதால் கோபம் கொண்ட மேத்யூ மறுநாள் மனைவியை குத்திக் கொலை செய்துள்ளார்.