கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பேரிடர் பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு முடக்கம் அமல் படுத்தப்பட்டு, தடுப்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. இதனால் ஒட்டுமொத்த மக்களும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டதால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசாங்கம் ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை என வழங்கி வந்தது.
ஏறக்குறைய மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என ஐந்து மாதங்கள் வழங்கப்பட்ட ரேஷன் பொருட்கள் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அத்தியாவசிய பொருட்களை பணம் கொடுத்துதான் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 1,3,4 தேதிகளில் வீடு தேடி சென்று டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருட்கள் வாங்க மாட்டார் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இலவச பொருட்கள் பெற்று வந்த தமிழக மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.