Categories
மாநில செய்திகள்

நான் கேட்டேன்…. நீங்க கொடுத்துடீங்க…. நன்றி சொன்ன ஸ்டாலின் …!!

திமுக நடத்தவிருக்கும் சமூக நீதிக்கான போருக்கு ஆதரவு தெரிவித்த சோனியா காந்திக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்ற ஜூலை 27-ஆம் தேதி, சமூகநீதியை பாதுகாக்கவும், பல நூற்றாண்டு காலங்களாக புறக்கணிக்கப்பட்டு இருக்கின்ற இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு சமத்துவத்தினை உறுதிப்படுத்தவும், அவர்கள் அனைவரும் சம வாய்ப்பை பெறவும் திமுக நடத்த உள்ள சமூகநீதிக்கான போருக்கு ஆதரவு அளிக்க கோரி, தேசிய அளவில் இருக்கின்ற பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதற்கு தமது ஆதரவை முழுமையாக வழங்குவதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு நன்றி கூறும் வகையில் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் டுவிட் பதிவிட்டுள்ளார். அதில், “மருத்துவ மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்காக மாநில இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கு நடத்தக்கூடிய போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ் கட்சியினருக்கும் அதன் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கும் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |