உலக அளவில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் தான் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
நம் நாட்டின் தேசிய விலங்கு புலி என்பதற்கு சான்றாக ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் புலிகள் இல்லாத நிலையில் உலகில் இருக்கும் மொத்த புலிகளின் 70 சதவீதம் இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு வருவதாக வனவிலங்கு புகைப்பட கலைஞர் மோகன் குமார் என்பவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச புலிகள் தினம் அனுஷ்டிக்கப்படுவதையடுத்து பல வனப்பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புலிகள் வசிப்பதற்கு ஏற்ற வாறு பல நடவடிக்கைகள் சிறந்த முறையில் எடுக்கப்பட்ட தான் நமது நாட்டில் அதிக எண்ணிக்கையில் புலிகள் இருப்பதாக கூறியுள்ளார்.