நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வண்ணங்களில் கொரோனா கேக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனாவின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் பலர் பலியாகி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான முயற்சியில் புதுவிதமான கேக் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை 1 கிலோ, 2 கிலோ என பொது மக்களின் தேவைக்கேற்ப கொரோனா வைரஸ் போன்று பல்வேறு வண்ணங்களில் அழகாக வடிவமைத்து உள்ளனர். ஒரு கிலோ 700 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த கொரோனா கேக் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.