Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செப்.,30 வரை – செம அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நான்கைந்து மாதங்கள் போய் கொண்டு இருக்கின்றன. இதனால் பல்வேறு வகைகளில் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான சரிவை சந்தித்துள்ளன தொழிற்துறை நடவடிக்கைகளை மீட்டெடுப்பதற்கு மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான உத்தரவுகளையும், அறிவிப்புகளையும்  வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா எதிரொலி காரணமாக கடந்த 2018 – 2019 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டிய வருமானவரி கணக்குக்கான காலஅவகாசம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் வருமான வரித்துறை கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் வருமான வரித்துறை கால அவகாசத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |