தமிழகத்தில் நாளையோடு ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் நேற்று தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு எந்த அளவு இருக்கிறது ? தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன ? இன்னும் என்னென்ன பணிகள் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது ? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் நீடிப்பது பற்றி மருத்துவ குழுவினருடன் இன்று முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனையில் போக்குவரத்து சேவை அனுமதி, கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் ஊரடங்கில் மூன்றாம் கட்ட தளர்வு குறித்த வழிகாட்டலை வெளியிட்டது. இதையும் ஒப்பிட்டு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.