இந்தியாவில் முதன்முறையாக சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் மேல் கடந்து இருக்கின்றது.
மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் பற்றி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவலில், இந்தியாவில் முதன்முறையாக சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 ஆயிரத்தை கடந்து இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 750க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். அதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தொட்டு இருக்கின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு தற்போது வரை 34,968 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 15,83,792 நபர்களில், 10 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேலானோர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,28,242 ஆகவும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10,20,582 ஆகவும் உள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தில் 10 ஆயிரத்து 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மராட்டியத்தில் 9,211 பேரும், மேற்குவங்காளத்தில் 2,294 பேரும் மற்றும் குஜராத்தில் 1,144 பேரும் கொரோனா நோயால் பாதிப்படைந்துள்ளனர். சென்ற ஜூலை 29 ஆம் தேதி வரையில் சோதனை மாதிரிகளின் எண்ணிக்கையானது 1,81,90,382 ஆகும். இவற்றுள் நேற்று சோதனை செய்யப்பட்ட மாதிரிகள் 4,46,642 என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருக்கின்றது.