Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருந்து கடைக்காரரிடம் ரூ 50,000 கேட்டு மிரட்டல்… ரவுடிக்கு வலைவீச்சு..!!

சென்னையில் மருந்துக்கடை நடத்தி வந்த நபரிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ரவுடியை காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள ஓட்டேரி காவல் எல்லைக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் பகுதியில் வினோத்குமார் என்பவர் சென்ற ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கஸ்தூரி மருந்தகம் என்ற கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய மற்றொரு கடை வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே நகர் பகுதியில் இருக்கின்றது. இத்தகைய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருக்கின்ற அனைத்து காவல் நிலையங்களிலும் ஐந்திற்கும் மேலான கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள சிலம்பு என்கிற சிலம்பரசன் (30) என்பவர் சென்ற இரு தினங்களாக வினோத்குமாரிடம் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் செய்துள்ளார்.

சிலம்பரசன், வினோத்குமாரிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகி இருக்கின்றது. இதுபற்றி ஓட்டேரி காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் கொடுத்துவிட்டு பின்னர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி இருக்கின்றார். கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் பலமுறை குண்டாசில் சிறைச் சென்று வந்துள்ள சிலம்பரசன் மீண்டும் தனது கைவரிசையை காட்ட தொடங்கி இருக்கின்றார். வினோத்குமார் அளித்த புகாரின் பேரில், ஓட்டேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சிலம்பரசனை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |