தமிழகத்தில் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு, மேற்கொள்ளும் தடுப்பு பணிகள், சுகாதார நடவடிக்கைகள் குறித்து நேற்று தமிழக முதல்வர் முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய இடங்களில் 75% பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம். உணவகங்கள், தேனீர் கடைகளில் 50% இருக்கையில் அமர்ந்து உணவருந்த அனுமதி என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய இடங்களில் 75% பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம். வணிக வளாகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி. பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்.
மாவட்டத்திலிருந்து மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை தொடரும். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் கட்டாயம். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.