தமிழக்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் தொடரும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பல்வேறு தடைகளை விதித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு.
திரையரங்கு, மது கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு. விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு. 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள சிறிய கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி. பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.