Categories
தேசிய செய்திகள்

ராமாயணம் கதையை 22 நாட்களில் எழுதிய 8 வயது சிறுமி…. இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்…!!

22 நாட்களில் ராமாயணம் கதையை புத்தக வடிவில் எழுதிய சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பில் இடம் பிடித்துள்ளார்.

ஒடிஸா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியின் பெயர் இஷ்ஹிதா ஆச்சாரி. கொரோனா ஊரடங்கு காரணமாக விடுமுறையில் உள்ள அவர், ஊரடங்கு காலத்தில் ராமாயணம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து வந்துள்ளார். இதையடுத்து, தான் பார்த்த இந்த தொடரை கதையாக எழுத ஆர்வம் காட்டியதால், இஷ்ஹிதாவிற்கு அவரது பெற்றோரும் தொடர்ந்து ஊக்கமளித்துள்ளனர். அதனால் தொடர்ச்சியாக 22 நாட்கள் ராமாயண கதையை புத்தக வடிவில் எழுதி முடித்துள்ளார் இஷ்ஹிதா.

இதுகுறித்து அச்சிறுமி கூறுகையில்,  ” எனது பெற்றோரின் ஊக்கத்தின் காரணமாகவே இந்த புத்தகத்தை என்னால் எழுத முடிந்தது, 57 பக்கங்களில் ராமாயணத்தை எழுதியுள்ளேன்” என இஷ்ஹிதா தெரிவித்தார். குறுகிய காலக்கட்டத்தில் ராமாயணம் எழுதிய இளம் சிறுமி என்ற பெருமையுடன் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-இல் இஷ்ஹிதா இடம்பிடித்துள்ளார்.

Categories

Tech |