டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் தற்போது டீசலுக்கான வாட் வரியை குறைத்து டெல்லி மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாக குறைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வரி குறைப்பால் டீசல் விலை 8ரூபாய் 36 பைசா குறையும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், டீசல் மீதான #VAT ஐ பாதியாக்கி டீசல் விலையை லிட்டருக்கு சுமார் ரூ. 9 குறைத்திருக்கிறது டெல்லி அரசு. வரவேற்க வேண்டிய முடிவு! தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பை முயற்சிக்க வேண்டும். மாநிலத்தில் விலைவாசி குறைய உதவும்; வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரசின் கருணையாகவும் இருக்கும்! என ட்விட் செய்துள்ளார்.
டீசல் மீதான #VAT ஐ பாதியாக்கி டீசல் விலையை லிட்டருக்கு சுமார் ரூ. 9 குறைத்திருக்கிறது டெல்லி அரசு. வரவேற்க வேண்டிய முடிவு!
தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பை முயற்சிக்க வேண்டும்.
மாநிலத்தில் விலைவாசி குறைய உதவும்; வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரசின் கருணையாகவும் இருக்கும்! https://t.co/E1RRR1TfK6
— M.K.Stalin (@mkstalin) July 30, 2020