தேர்தல் என்ற ஜனநாயக முறையை ஒழிப்பதற்கான முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்..
இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது , ஒரே நேரங்களில் மத்தியிலும் மாநிலத்திலும் தேர்தல் நடத்துவது என்பது ஜனநாயக்கத்திற்கு புறம்பானது . இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் பிடியில் இருக்கிறதுஎன்றும் . பாஜகவின் சொற்களுக்கு இணங்க தேர்தல் ஆணையம் இயங்கி கொண்டிருக்கிறதுஎன்றும் திருமுருகன் காந்தி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார் மேலும் . தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சாசன நிறுவனம் என்பதை புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் .
நடுமையான நிலையில் தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை என்பது மாநில மற்றும் தேசிய அளவில் இல்லை என்றும் ,. மறுபடியும் விவசாயிகளை கடன்காரர்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்றும் . அவர் குற்றம் சாட்டியுள்ளார் ..மேலும் இந்திய ஏழை மக்களுக்காகவாளோ அல்லது விவசாயிகளுக்காகவோ எந்தத் திட்டத்தையும் இந்த அரசு அறிவிக்கவில்லை.
மேலும் இந்தியாவின் பொருளாதிட்டம் குறித்து ஆய்வு பூர்வமான அறிக்கை என்பது சமர்ப்பிக்கப்படவில்லை .மேலும் கல்வியை பொறுத்தவரையில் 4 சதவிகிதமாக இருந்த கல்வி தற்போழுது 2 சதவிகிதத்திற்கும் கீழ் பாஜக ஆட்சியில் குறைந்துள்ளது . குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தேர்தல் என்றஜனநாயக முறையை ஒழிக்க பாஜக முயற்சி செய்து வருகிறத்து என்று அவர் தெரிவித்தார்.