Categories
தேசிய செய்திகள்

மாட்டு சாணம் மற்றும் கோமியத்தில் “சஞ்சீவ்னி ராக்கி”- பரமஹம்சர் அறக்கட்டளை..!!

ராமகிருஷ்ணா பரம்ஹான்ஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் மாட்டு சாணம், கோமியம் கொண்டு சஞ்சீவ்னி ராக்கிகளை தயாரித்து வருகின்றனர்.

கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள எல்லை கோட்டில்  கடந்த மாதம் சீன படையினருடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீன தயாரிப்பு பொருள்களை இந்தியா புறக்கணித்து வருகிறது. இதனால், மின்னணு பொருள்களின் விற்பனை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குஜராத்தின் கட்ச் சார்ந்த ராமகிருஷ்ணா பரம்ஹான்ஸ் அறக்கட்டளை ஒரு தொழிற்சாலையை அமைத்துள்ளது. அங்கு மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியத்தின் மூலம் ராக்கிகளை உருவாக்குகின்றனர். இது பற்றி அறக்கட்டளை உறுப்பினர்கள் கூறுகையில், கடந்த 4 வருடங்களாக ராக்கி தயாரிப்பதில் அறக்கட்டளை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த ராக்கிக்கு ‘சஞ்சீவ்னி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Categories

Tech |