சீன அதிபர் ஜிங்பிங் பொறுப்பேற்ற பின்னர் தான் அந்த நாடு முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளதாக ஐநாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி ஜிங்பிங் அதிபர் ஆவதற்கு முன்னர் சீன அதிகாரிகள் மிகவும் அமைதியான முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார். ஜிங்பிங் தன்னை ஒரு மன்னர் போல காட்டிக்கொள்ள தொடங்கிய பின்னர்தான் அந்நாட்டு அதிகாரிகளிடம் முரட்டுத்தனம் அதிகரித்துவிட்டதாக நிக்கி ஹேலி விமர்சித்துள்ளர். ஐநாவில் பதவிகளை பிடிக்கவும் தலைமை பொறுப்புக்கு வரவும் தங்களுக்கு ஓட்டு போடுமாறு உறுப்பு நாடுகளை மிரட்டவும் சீன அதிகாரிகள் ஆரம்பித்துவிட்டனர்.என நிக்கி ஹேலி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை நீண்டநாள் நிலைக்காது என எச்சரித்த அவர் மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தினால் புரட்சி வெடிக்கும் என்பது வரலாறு எனவும் குறிப்பிட்டுள்ளார். ஹாங்காங், தைவான் தென் சீனக்கடல் சீனா தொடங்கி தற்போது இந்தியா, அமெரிக்கா என அனைத்து நாடுகளையும் சீனா சீண்டி வருகிறது எனவும் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.