Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வரதட்சனை கொடுமை… 120 சவரன் நகை வேணும்… திருமணமான ஒரே வருடத்தில் உயிரை விட்ட பெண்..!!

சென்னையில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிரியங்கா (24) என்பவர் வசித்துவருகிறார். எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி கொண்டிருக்கும் சென்னை காட்டாங்குளத்தூரை சேர்ந்த நிரேஷ்குமார்(28) என்பவருக்கும் மேட்ரிமோனி இணையதளம் மூலமாக பெண் பார்த்து சென்ற 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகிய மூன்று மாதங்களில் வரதட்சனை கொடுமை காரணமாக உண்டான பிரச்சனையால் பிரியங்கா தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியங்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்தின்போது பிரியங்காவிற்கு 120 சவரன் நகை போடுவதாக சொல்லிவிட்டு பெண் வீட்டார் 40 சவரன் நகை மட்டுமே போட்டுள்ளனர். அதனால் இரு வீட்டாருக்கும் இதை தொடர்ந்து பிரச்சனை நடந்து வந்துள்ளது. வரதட்சனை பிரச்சனையால் பிரியங்காவை மணமகன் வீட்டார் தொடர்ந்து துன்புறுத்தியதால் திருமணமான மூன்று மாதங்களிலேயே ப்ரியங்கா தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார்.

 

இந்த நிலையில் பிரியங்காவின் தாய் மற்றும் தந்தை இருவரும் சுரேஷ்குமார் இடம் மீதி நகையை விரைவில் போட்டு விடுவதாக சொல்லி சமாதானம் செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர். இருந்தாலும் நிரேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மொத்த நகையையும் கட்டாயம் போட வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் நிரேஷ் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடபட்டிருக்கின்றது.

Categories

Tech |