Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 5-ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் உணவகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இம்மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு  உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில்கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள், அங்கன்வாடிகள், உணவகங்கள், திரையரங்குகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் பங்கேற்கலாம் என்றும், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது . அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவுகள் ஊரடங்கு தொடரும் என்றும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |