Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விஞ்ஞான பூர்வமான தடுப்பு சுவர் வேண்டும்…. மீன் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை….!!

விஞ்ஞானபூர்வமாக தடுப்பு சுவர்கள் அமைக்கக்கோரி கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை பாதுகாக்கவும் அவர்களின் மீன்பிடி தொழிலுக்கு பாதகமில்லாமல் தடுப்புச் சுவர்களும், தூண்டில் வளைவுகளையும் விஞ்ஞான அடிப்படையில் அமைக்காமல் பல கோடி ரூபாய் விரையம் செய்யப்படுகிறது.

தூண்டில் வளைவுகள் கடல் அலைகளுக்கு தாக்குப் பிடிக்காமல் சின்னாபின்னமாகியுள்ளது. பெரிய தடுப்பு சுவர்களும் சேதமடைந்து மணலால் மூடப்பட்டுவிட்டது. தடுப்பு சுவர்களும் தூண்டில் வளைவுகள் மீன்பிடி தொழிலுக்கு பாதுகாப்பில்லாமல் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே மீனவர்களையும், மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க கேரள மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கடல் தடுப்பு சுவர்கள் போல் விஞ்ஞான பூர்வமாகப் சுவர்கள் அமைப்பதற்கு அதிகாரிகள், மீனவ பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

மேலும் கோவளம் ஊரை சேர்ந்த அந்தோணி என்பவர் கடந்த 21ஆம் தேதி இயற்கை சீற்றத்தின் காரணமாக அசுர அலையில் தூண்டில் வளைவில் மோதி உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

Categories

Tech |