Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…திடீர் குழப்பம் ஏற்படும்…கடன்கள் தீரும்…!

மேஷ ராசி அன்பர்களே …!   இன்று சமாளிக்க முடியாத அளவில் செலவுகள் அதிகமாக இருக்கும். உறவுகள் மீது தேவையற்ற வெறுப்புகள் ஏற்படும். சினம் தணிந்து சிக்கல்கள் தீரும். பார்வையால் பணவிரயம் ஏற்படும். வியாபாரிகளுக்கு மனக்குழப்பங்கள் ஏற்படுவதற்கான சூழல் இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

உத்தியோக மாற்றம் ஏற்படும். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை  தான் என்று இருக்கும் கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும் உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். மனதில் மட்டும் திடீர் குழப்பம் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போதும், ஆயுதங்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும்.

காதலர்கள் இன்று கண்டிப்பாக பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |