ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஹிலால் என்பவர் ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய விமானி என்ற பெருமையினை பெற்று இருக்கிறார்.
முதல் 5 ரபேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்துள்ளன. அந்த ரபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய விமானி என்ற பெருமையினை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஹிலால் அகமது ரத்தேர் என்பவர் பெற்றிருக்கின்றார். இவர் 7000 கிலோ மீட்டர் வான்வெளி பயணத்திற்கு பின்னர் இந்தியாவின் அம்பாலா என்ற பகுதியில் ரபேல் விமானத்தை தரையிறக்கி உள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பிறந்த அவரின் தந்தை முகமது அப்துல்லா ரதர் ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறார். 1962-ஆம் ஆண்டு இந்தியா – சீனா இடையில் நடந்த போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களில் ஒருவராக ஹிலாலின் தந்தையும் ஒருவராவார்.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்ற ஹிலால், 1988 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் போர் விமானி ஆகியுள்ளார். மேலும் MiG 21s, Mirage-2000, Kiran போன்ற பல்வேறு போர் விமானங்களை எத்தகைய விபத்தும் ஏற்படாமல் வெற்றிகரமாக ஹிலால் இயக்கத் தெரிந்தவர் ஆவார். இதனைத் தொடர்ந்து ரஃபேல் போர் விமானங்களை இந்தியா கொண்டு வருவதற்காக இவர் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். சென்ற 27ஆம் தேதி விமானத்துடன் பிரான்ஸ் நாட்டிலிருந்து புறப்பட்டு பின்னர் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு தற்போது இந்தியா வந்தடைந்திருக்கிறார்.