Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…எதிர்ப்புகள் நீங்கும்… தன்னம்பிக்கை உருவாகும்…!

துலாம் ராசி அன்பர்களே…!   இன்று கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியின் சாதகமான சூழல் உருவாகும். கோபத்தை குறைத்துக் கொண்டால் அனைத்து விஷயங்களிலும் நன்மை ஏற்படும். பெரியோர்களின் பரிபூரணமான ஆசி உங்களுக்கு கிடைக்கும். அவருடைய ஆலோசனை பயன்படுத்தி ஓரளவு காரியத்திலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். மன தைரியம் உண்டாகும். எந்த ஒரு விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன்  இன்று ஈடுபடுவீர்கள். அதனால் காரிய வெற்றியும் காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் தன்னம்பிக்கை உருவாக்கும். துணிச்சலான சில முடிவுகளை நீங்கள் எடுப்பதன் மூலம் நல்ல நன்மைகளையே ஏற்படுத்தும். பெரிய பெரிய எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

அது மட்டும் இல்லைங்க தூரதேசத்தில் இருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி கொடுப்பதாகவே இருக்கும். காதலர்களுக்கும் சிறப்பான நாளாக அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கருநீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்டநிறம்: கருநீலம் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |