மகர ராசி அன்பர்களே …! இன்று வீட்டுக்கு தேவையான நவீன ஆடம்பர சாதனங்களை வாங்குவீர்கள். வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும். தெய்வபக்தி மன நிம்மதி கொடுக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தயவுசெய்து தலையிட வேண்டாம். அது உங்களுக்குப் பெரும் தலைவலியாக அமைந்துவிடும். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.
தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் கூடுதலாக தான் உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். செயலில் வேகம் அதிகமாக இருக்கும்.
காதலர்களுக்கும் இன்று நாள் இனிமையான நாளாக அமையும். இன்று வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.