கும்ப ராசி அன்பர்களே …! இன்று தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். செயல்பாடுகளில் வரக்கூடிய தடை தாமதம் கண்டு துவண்டுவிடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம். உங்கள் குடும்பத்தில் ஒரு தரமான சுப பலன்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசுவது நல்லது.
கடன் பிரச்சினைகள் தீரும். உங்களுடைய செல்வநிலை உயரும். பெற்றோருக்குப் பெருமை தேடி கொடுப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல பலன்களும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் கூட ஏற்படலாம். நிதி மேலாண்மையில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். அதேபோல மற்றவர்களுக்கு எந்தவித ஆலோசனையும் நீங்கள் கொடுக்க வேண்டாம்.
காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.