Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…மரியாதை கூடும்… மனதில் துணிச்சல் அதிகரிக்கும்…!

மீன ராசி அன்பர்களே…!    இன்று தேவையான அனைத்து வளங்களும் உங்களுக்கு சேரும். செல்வாக்கு உயரும். புதிய பந்தங்கள் அமையும். திருமண உறவுகள் நல்ல விஷயத்தில் கைகொடுக்கும். தனக்கென அழகிய வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். சேமிப்பிற்கு முயற்சிகளைச் செய்யுங்கள் ஏனெனில் வருமானம் அதிகமாக இருக்கும். எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பணம் வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படும் புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். முன்னேற்றமான நாளாக இருக்கும்.

சில அதிர்ச்சி தரும் வாய்ப்புகளும் வந்து அமையும். அதே போல் காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பு மிக்க நாளாகவே இருக்கிறது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்.

Categories

Tech |