தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,39,978ஆக அதிகரித்தது. 5,295பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,78,178பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,175 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 98,767 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,785 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 74.24 % குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26 மாவட்டங்களில் 97 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 3,838 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 59,437 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25,01,919 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 53 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,962ஆக அதிகரித்துள்ளது. தமிழக்தில் இன்று எந்த மாவட்டமும் தப்பாமல் 37 மாவட்டத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசை நடுங்க வைத்துள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா உயிரிழப்பு:
சென்னை-18
தஞ்சாவூர் 6
அரியலூர் 1
செங்கல்பட்டு 4
கோயம்புத்தூர் 4
கடலூர் 4
திண்டுக்கல் 3
காஞ்சிபுரம் 3
மதுரை 2
நாகப்பட்டினம் 1
புதுக்கோட்டை 3
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 1
சேலம் 3
சிவகங்கை 2
தென்காசி 3
தேனி 4
திருவள்ளூர் 2
திருவண்ணாமலை 2
திருவாரூர் 3
தூத்துக்குடி 5
திருநெல்வேலி 8
திருப்பூர் 2
வேலூர் 4
விழுப்புரம் 2
விருதுநகர் 5