Categories
தேசிய செய்திகள்

பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞனுக்கு செருப்படி…!!!

மைசூர் அருகே பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞரை இளம்பெண் ஒருவர் செருப்பால் அடித்த காட்சிகள் வீடியோவில் வைரலாகிறது.

கர்நாடக மாநிலம் மாண்டிகாவில் இருந்து பெண்மணி ஒருவர் பாம்பு புத்ரா நகருக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பெண்ணின் இருக்கைக்கு பின்புறம்  அமர்ந்திருந்த நபர் பெண்ணிடம் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த அந்த பெண் சில்மிஷம் செய்த இளைஞரின் சட்டையை பிடித்து கேள்வி எழுப்பினார். மன்னித்து விடுமாறு அந்த இளைஞன் கேட்க உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று கூறி இளைஞரை செருப்பால் அடித்து பாடம் புகட்டினார்.

தவறு செய்த மர்ம நபரை பெண்மணி ஒருவர் தனியாக நின்று தண்டித்து கேள்விகேட்ட வீடியோ தற்பொழுது வைரலாகி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பெண்மணிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் வீடியோவை அடிப்படையாக கொண்டு தவறு செய்த மர்ம நபரை மாண்டிகா காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Categories

Tech |