Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 19 முதல்….. கல்லூரி மாணவர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு….!!

கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து கல்லூரிகளிலும் தற்போது இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் பணிகள் முடிந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவது எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், இதற்கு சென்னை பல்கலைக்கழகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு சேரவிருக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் எனவும், ஆகஸ்ட் 3ம் தேதி முதல் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்க கூடிய இணைப்புக் கல்லூரிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பில் மதிப்பீட்டுத் தேர்வு, கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்தவேண்டும் எனவும் தெரிவித்த பல்கலைக்கழகம், இளங்கலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 10 க்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

 

Categories

Tech |