Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியா?… ரிக்கி பாண்டிங்கா?… யார் சிறந்த கேப்டன்… அஃப்ரிடியின் பதில்.!!

பாண்டிங்கை விட தோனி தான் சிறந்த கேப்டன் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி கூறியுள்ளார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான அஃப்ரிடி ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அதில் ரசிகர் ஒருவர் ரிக்கி பாண்டிங், தோனி இவர்களில் தலைசிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை முன்வைத்தார். ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த அஃப்ரிடி இளம் வீரர்களை வைத்தே அணியை சிறப்பு மிக்கதாக மாற்றிய பாண்டிங்கை விட தோனிதான் மிகச் சிறந்த கேப்டன் என கூறியுள்ளார்.

T20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் என அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வெற்றி பெற்ற ஒரே கேப்டன் என்ற சாதனையைப் படைத்தவர் தோனி. ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, T20 என மூன்று விதமான ஆட்டங்களிலும் மொத்தம் 332 போட்டிகளில் கேப்டனாக தோனி இருந்துள்ளார். அதில் 120 தோல்விகளை சந்தித்து இருந்தாலும் 178 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. சிறந்த கேப்டனாக அவரது வெற்றி சதவீதம் 53.61 இருக்கின்றது.

பாண்டிங் மறுபுறம் தனது ஆஸ்திரேலிய அணிக்காக 2003, 2007 என இரண்டு உலகக் கோப்பைகளை வெற்றிபெற்றுள்ளார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டனாக 324 போட்டிகளில் பங்கேற்ற அவர் 77 தோல்விகளையும் 220 வெற்றிகளையும் பார்த்துள்ளார்” என கூறியுள்ளார். அதோடு மற்றொரு ரசிகர், நீங்கள் பந்து வீசியதில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வி கேட்க அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரையன் லாரா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் என பதிலளித்துள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |