Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரையும் கட்டி போடணும்னு இல்ல…. உங்களை விட ஆர்வம் அதிகமா இருக்கு …!!

ஊரடங்கு, தளர்வு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் நேற்று அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்கப்பட்டது. அப்போது, ஊரடங்கை முதலமைச்சர் அறிவிக்கிறார் என்று சொன்னால் மருத்துவக்குழுவின் ஆலோசனைகள், அறிவுரைகளை பெற்று தான் அவ்வப்போது ஊரடங்கு அறிவிக்கப்படுகின்றது. ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்படும் போது தளர்வுகள் என்பது  தவிர்க்க முடியாது. இந்த தளர்வுகள் மூலம் எதிர்பார்க்கின்ற லட்சியம் என்று சொன்னால் கொரோனா இல்லாத ஒரு மாநிலமாக, கொரோனா இல்லாத ஒரு இந்தியாவாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால் சில தளர்வுகள் அறிவிக்கப்படவேண்டும்.

இந்த தாக்கம் வெகுவாக குறைந்து ஜிரோ அளவிற்கு வரும் போதுதான் முழுமையான அளவுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத ஒரு நிலை இருக்கும். இப்போது  ஜூலை மாதத்தில் எப்படி இருந்ததோ… அதே போன்ற ஒரு நிலை இருப்பதால் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் என்ற முதலமைச்சர் அறிவித்திருக்கின்றார். தளர்வுகளை எங்களுக்கும் பொதுவாக உடனே எல்லாமே செய்து விடணும் என்ற ஆர்வம் உங்களைவிட அதிகமாக இருக்கிறது. யாரையும் கட்டிப்போடணும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது.

இதற்கு  முழு ஒத்துழைப்பு எங்கிருந்து வரவேண்டும்… அரசாங்கம் தன் கடமையை செய்யுது… மக்கள் தங்களுடைய கடமை செய்யணும்… மக்கள் தங்களுடைய கடமையான முழு முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளி, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே போயிட்டு வருது இந்த நான்கு விஷயம் ஒழுங்காக செய்தால் கொரோனா கண்டிப்பா ஜீரோ வந்துரும். எங்க போனாலும் முககவசம் போடணும் என்பது நம்முடைய வாழ்க்கையாக மாறிடுச்சு.

கேரளாவில் இரண்டாவது கட்டம் வந்துட்டுது. சீனாவில் இரண்டாவது கட்டம் வர ஆரம்பித்து விட்டது.  மக்கள் எதிர்பார்ப்பதை போல தளர்வுகள் அறிவித்து விடலாம். ஆனால் விளைவு மோசமாக இருக்கும். அதனால தான் அவ்வப்போது மருத்துவ குழுவின் ஆலோசனைகளை பெற்று அதன் அடிப்படையில் சில கட்டுப்பாடுகள் இருக்கக்கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு என்பது அரசு சொல்கின்ற அறிவுரைகளை 100 சதவீதம் அளவுக்கு கேட்டா கண்டிப்பா கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம்.

எங்களை கண்காணிக்க அரசு தேவையில்லை… இது என்னுடைய உயிர் சம்பந்தப்பட்டது… நான் பத்திரமாக என்னை பாதுகாத்து கொள்வேன். என்னால மத்தவுங்களுக்கு பிரச்சினை வரக்கூடாது என்கிற ஒரு நிலையில் நான் இருக்கிறேன் என்று எல்லாருமே அப்படி இருந்தா எல்லா தளர்வுகளும் கொடுத்துறலாம் , எந்த பிரச்சனையும் இருக்காது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அப்படி இருந்தாங்க என்றால் தாராளமா எல்லாத் தளர்வுகளும்…. எந்த பிரச்னையும் இருக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |