Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் அதிரடி – உத்தரவு போட்ட ஐகோர்ட்…!!

சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை முழுமையாக வழங்க வேண்டும், சத்தான உணவுகளை வழங்க வேண்டும், அம்மா உணவுகளில் முட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில்  விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது… சத்தான உணவு வழங்கமுடியாது முடியாத நிலை இருப்பதால் சத்தான உணவு சமைப்பதற்கான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் சத்து மாத்திரைகள், சத்தான உணவுகளை வழங்குவது போல சத்துணவு மாணவர்களுக்கு உள்ள முட்டையை தினமும் வழங்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தார்கள்.

அதேபோல ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நாப்கின் மாணவிகளுக்கு தேவைப்படும் போது வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் தொற்று ஏற்படும் எனவே… பள்ளிக்கு அழைத்து வழங்க முடியாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்கப்பட்ட நீதிபதிகள் மாணவர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க அவசியம் என்பதால் அதற்கான திட்டத்தை ஆகஸ்ட் 3ம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |