Categories
உலக செய்திகள்

முக கவசத்தால் பிரச்சனை…. காது கேளாதோர் வேதனை…!!

முக கவசம் அணிவதால் காது கேளாதவர்கள் பெரும் பிரச்சனையை சந்தித்து வருவதாக தங்களின் வேதனையை தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், வங்கிகள், வீட்டுவசதி சங்கங்கள், தபால் அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீறினால் 50 பவுண்ட் முதல் 100 பவுண்ட் வரை (சுமார் ரூ.4,900 முதல் 9,800 வரை) அபராதம் விதிக்கப்படும். ஆனால் காது கேளாதவர்களுக்கு முக கவசம் என்பது தொல்லையாக மாறி வருகிறது. ஏனென்றால் இவர்களது முகபாவனைகளும், உதடு அசைவும் முக கவசத்தால் மறைக்கப்பட்டுவிடுகின்றன. இதனால் அந்த நாட்டில் காது கேளாத 1 கோடியே 20 லட்சம் பேர்களுக்கு மக்களிடம் தொடர்பு கொள்வது சிரமமாகி விட்டதால், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதுபற்றி காது கேளாதோர் சங்கத்தின் தலைவர் மங்கை சுதர்சனை செய்தி நிறுவனம் ஒன்றில் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன்  பேசியபோது, “தனிப்பட்ட முறையில் நான் கடைக்கு செல்லவும், முக கவசம் அணிந்த மக்களுடன் பேசவும் பயப்படுகிறேன். நான் காது கேளாதவள் என்பது மக்களுக்கு தெரியாது. அவர்கள் என்னோடு பேசுவார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர்களை நான் புரிந்து கொள்ள முடியாது. இது சங்கடமாக இருக்கும். இது எனக்கு மன அழுத்தத்தை தருகிறது” என்று கூறியுள்ளார். சென்ற மே மாதம் தேசிய புள்ளி விவர அலுவலகம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

அதில் காது கேட்பதில் பிரச்சினை உள்ளவர்கள், கொரோனா காலத்தில் வீடுகளை விட்டு வெளியேற வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தொண்டு நிறுவனம் முக கவசம் அதை மோசமாக்குகிறது என்று கூறியதும் அம்பலமாகியுள்ளது.  இது குறித்து காது கேளாதவர்கள் ஆராய்ச்சி மற்றும் கொள்கை அமைப்பை சேர்ந்த அய்லா ஓஸ்மென் கூறுகையில், “ காது கேளாதோர் தகவல் பரிமாற்றம் செய்வது சாத்தியமற்றது. இது மிகப்பெரிய கவலை. இது சவாலாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார். காது கேளாதோருடன் யாரும் உடன் செல்கிறபோது, அவர்களுக்கு முக கவசம் அணிவதில் இருந்து விதிவிலக்கு வழங்கி இருப்பது ஆறுதலாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Categories

Tech |