Categories
மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வேலையிழந்த தனியார் நிறுவன ஊழியர்கள் : வாழ்வாதாரத்திற்காக விவசாய பணியில் களமிறங்கினர்….!!

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த தனியார் நிறுவன ஊழியர்கள், பட்டதாரிகளும் விவசாய பணியில் களம் இறங்கியுள்ளனர்.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். பணிக்கு செல்ல முடியாத பலர் வாழ்க்கையைக் கடத்த வேண்டும் என்பதற்காக மாற்று வேலையை தேடி செல்லும் நிலையும் உருவாகியுள்ளது. அவ்வகையில் நாகர்கோவிலில் ஊரடங்கால் வாழ்வாதாரம்  இழந்த  தனியார் நிறுவன ஊழியர்களும், பட்டதாரிகளும் விவசாய பணியில் களம் இறங்கியுள்ளனர்.

நாகர்கோவில்அருகே பறக்கை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பிய அவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் வாழ்வாதாரத்திற்காக கால்வாய் சீரமைப்பு மற்றும் விவசாய பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இவர்களின் செயல் அனைவரிடமும்  பாராட்டை பெற்றுள்ளது.

Categories

Tech |