Categories
உலக செய்திகள்

பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய எலிகள்… அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட அவலம்…!!!

ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் மற்றொரு குழந்தையை எலிகள் கடித்து உள்ள சம்பவம் அந்த மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீதர் மாவட்டம் புறநகரை சேர்ந்த அருண்- பூஜா என்ற தம்பதி உள்ளனர். பூஜா கர்பிணயாக  இருந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பீதரில் உள்ள பிரிம்ஸ் அரசு மருத்துவமனையில் பூஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.  பிறந்த ஒரு குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்து விட்டது. மற்றொரு குழந்தையின் உடல் நிலையும் சரியில்லாமல் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், பூஜா அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் கழிவறை வசதி இல்லை என்றும் இதன் காரணமாக தனது குழந்தையை விட்டுவிட்டு வேறு வார்டில் உள்ள கழிவறைக்கு பூஜா சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து அவர் வார்டுக்கு வந்த போது குழந்தை அழுது கொண்டே இருந்தது. மேலும் குழந்தையின் கை, காலில் பலத்த காயங்கள் இருந்துள்ளது. அதே நேரத்தில் அந்த வார்டில் இருந்து ஏராளமான எலிகள் ஓதியுள்ளன.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூஜா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அவர்கள் விரைந்து வந்து குழந்தையை பார்வையிட்டபோது குழந்தையை எலிகள் கடித்திருந்தது தெரியவந்தது. இதற்காக குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரிம்ஸ் மருத்துவமனைையானது பழமையான கட்டிடத்தில் அமைந்துள்ளதால் அங்கு எலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. அதே நேரத்தில் நோயாளிகளுக்கு கழிப்பறை உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகள் கூட இல்லை என பூஜா குற்றச்சாட்டியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை இழந்து விட்டதாகவும், தற்போது மற்றொரு குழந்தையை எலிகள் கடித்து கை, காலில் படுகாயம் அடைந்திருப்பதாலும் என்ன செய்வது என்றே தெரியாமல் அருணும், பூஜாவும் வேதனையில் உள்ளனர். இந்த சம்பவத்தால் பீதர் மாவட்டம் பரபரப்பை அடைந்துள்ளது.

Categories

Tech |