Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…. 10ஆண்டு சிறை தண்டனை… திமுக முன்னாள் எம்எல்ஏ விடுவிப்பு …!!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் பெரம்பலூர் தொகுதியில் திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டில் வேலைபார்த்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக முன்னாள் எம் எல்.ஏ ராஜ்குமார்,  அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் உட்பட ஆறு பேருக்கு எதிராக ஆள் கடத்தல், கற்பழிப்பு, கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சென்னையில் திறக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏக்கள் எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிரான புகார் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ 42 ஆயிரம் அபராதம் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில் விசாரணை நீதிமன்றம் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று  தெரிவித்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான வழக்கில் ஆதாரம் நிரூபிக்கப்படாததால் அவரை வழக்கில் இருந்து விடுவித்து தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

Categories

Tech |