Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சமூக வலைதளங்களில் அவதூறு – மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு …!!

மதரீதியான அவதூறுகளளை தடுக்க கூடிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு கருத்துக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருப்பர் கூட்டம் நபர்கள் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை முழுமையாக

தணிக்கை செய்யாமல் பதிவேற்றம் செய்த சமூக வலைதளங்கள் நிறுவனங்களான யூடியூப், ஃபேஸ் புக் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய வீடியோக்களை மேற்கொண்டு பதிவேற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேசன், ஹேமலதா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து மூன்று வார காலத்துக்குள் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

Categories

Tech |