Categories
தேசிய செய்திகள்

 ரஃபேல் விமானம்….. நமக்கு கூடுதல் பலம்….. சச்சின் கருத்து….!!

ரஃபேல் விமானம் இந்திய ராணுவத்தின் வான்படைக்கு கூடுதல் பலம் என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ விமானப் படையில் ரபேல் விமானம் இடம்பெற்றது தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டு ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான விளக்கங்களும் அவ்வபோது சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பல பிரபலங்களும் இந்த ரபேல் விமானம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானம் இணைந்ததற்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அதிநவீன போர் விமானமான ரஃபேலை எங்கள் ராணுவத்தில் சேர்ந்த இந்திய விமானப்படைக்கு வாழ்த்துக்கள். வான்பகுதியில் நமது தேசத்தை ஓய்வில்லாமல் அயராது பாதுகாக்கும் நாம் பாதுகாப்பு படைகளுக்கு இது மிகப்பெரிய கூடுதல் பலம் என கூறியுள்ளார்.

 

Categories

Tech |