Categories
உலக செய்திகள்

இந்தியா, சீனா சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுவதே இல்லை, நாங்கள்தான் கவலைப்படுகிறோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பிரான்ஸ் பருவநிலை மாநாட்டின் அப்படி எந்த ஒரு நாடும் செயல்படுவதில்லை. ஆனால் அமெரிக்காவை மட்டும் குறை சொல்கிறீர்கள் என்று டிரம்ப் குற்றம் கூறியுள்ளார்.

டெக்ஸாசில் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், பருவநிலை மாற்றத்திற்கு பெரிய காரணியாக இருக்க கூடிய கரியமிலவாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டில் போடப்பட்டுள்ளது. இருந்தாலும் அதன் படி எந்த ஒரு நாடும் செயல்படவில்லை. அமெரிக்கா கரியமில வாயு வெளியேற்றத்தில் முதல் பங்கு வகித்து வருகிறது என்று குற்றம் கூறியுள்ளனர். இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இதனைப்பற்றி எத்தகைய கவலையும் கொள்வதில்லை.இத்தகைய காரணத்தால் தான் ஒருதலைப்பட்சமான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி உள்ளோம். அதிபர் ஒபாமா இருந்தபோது எரிசக்தித்துறை பெரும் நெருக்கடியில் இருந்து வந்தது. அதற்கு நான்தான் பெரும் தீர்வு கண்டேன்.

அமெரிக்கா தற்போது இயற்கை எரிவாயு எண்ணை துறையில் முதல் இடத்தில் இருக்கிறது. தீவிர இடதுசாரி சிந்தனையுடன் செயல்படும் ஜனநாயக கட்சியினர் அமெரிக்க பாரம்பரியத்தை அழிப்பதற்கு செயல்பட்டு வருகின்றனர். மேலும் அமெரிக்க மக்களின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்ற முயற்சி செய்கின்றனர் என்று கூறியுள்ளார். பின்னர் அமெரிக்க எம்.பி.சக் கிராஸ்லி கூறுகையில், உலகளாவிய வர்த்தகத்தில் சென்ற 20 வருடங்களாக இந்தியா மற்றும் சீனா மட்டுமே அதிக லாபம் பெற்றுள்ளது. இருந்தாலும் இந்த இரு நாடுகளும் எத்தகைய பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |