Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வழிமாறி போன ஆட்டோ…. வண்ணக் குடைகளால் பொங்கும் வசந்தம்..!!


ஆட்டோ டிரைவர் வண்ண குடைகளை விற்பதால் மன மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்(32 வயது). திருமணமாகி மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். பயணிகள் ஆட்டோ ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். கொரோனா வைரசால் மாதம் முழுவதும் வருமானம் இல்லாமல் தவித்த காளிதாஸ் குடும்பத்தை காப்பாற்ற என்ன வழி என்று சிந்தித்தார். அவருடைய தந்தை செய்த குடை வியாபாரத்தை ஆட்டோவில் கொண்டு சென்று விற்பனை செய்ய முடிவெடுத்தார்.

தற்போது குடை, பர்ஸ், பெல்ட், கண்ணாடிகளை கிராமப்புற பகுதிகளுக்கு ஆட்டோவில் கொண்டு சென்று விற்பனை செய்கிறார். அவர் கூறுகையில் “வருமானம் இல்லை என்பதால் ஆட்டோ டிரைவர்கள் பலர் காய்கறி விற்பனைக்காக சென்றுவிட்டனர். புரியாத காய்கறி விற்பனைக்கு செல்வதைவிட அப்பா செய்யும் குடை விற்பனையை ஊர் ஊராக சென்று செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதன்படி செயல்படுகிறேன். கைநிறைய பணம் இல்லை என்றாலும், குடும்பத்தை நடத்தும் அளவிற்கு வருவாய் கிடைக்கிறது. கையில் பணம் இல்லை என யாரிடம் சென்று கேட்க முடியும்? எனவே இப்படி குடை வியாபாரத்தில் இறங்கி விட்டேன் அலைச்சல்கள் இருந்தாலும் நிம்மதி உள்ளது” என காளிதாஸ் கூறியுள்ளார்.

Categories

Tech |