Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி… “இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது”… மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்..!!

கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அலுவலர் கூறியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு உயர் அலுவலர் ராஜேஷ் பூஷன் நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், “இரண்டு கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனை இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் பரிசோதனையில் 1,150 நபர்களும், இரண்டாவது பரிசோதனையில் 1,000 நபர்களும் அவர்களை உட்படுத்திக் கொண்டுள்ளனர். சீனா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற  நாடுகள் மூன்றாவது கட்ட பரிசோதனையை எட்டி இருக்கின்றன.

இந்தியாவில் மருந்து உற்பத்தி துறையானது மிக சிறப்பான நிலையில் இருக்கின்றது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிக்காண ஒப்புதல் பெற்றவுடன் உலக அளவில் தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெரும் பங்கு வகிக்கும். இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதே சமயத்தில் கொரோனா பலி எண்ணிக்கையிலும் குறைந்து கொண்டிருக்கிறது. இது ஒரு நம்பிக்கை அளிக்கும் அம்சமாக உள்ளது” என ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

Categories

Tech |