அமெரிக்காவில் ஒரு நாள் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று முதல் முதலாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா. அந்த நாட்டில் 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.50 லட்சதிற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. கொரோனா வைரஸ் வீட்டு வளர்ப்பு மிருகங்கள் மூலம் மனிதருக்கு பரவுகிறது என்று எந்த ஆதாரமும் இல்லை. இதுகுறித்து நாயின் உரிமையாளர் ராபர்ட் மற்றும் அலிஸன் மஹோனி இருவரும் நேஷனல் ஜோகிராஃபிக் சேனலுக்கு அளித்த பேட்டியில்:” ஜெர்மன் ஷெஃபர்ட் இனத்தை சேர்ந்த எங்களின் 7வயது நாய் கொரோனாவால் உயிரிழந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நாய்க்கு சுவாசக்கோளாறு இருந்தது. அதற்குப்பின் ராபர்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். அதன் பின் மே மாதம் கால்நடை மருத்துவர் எங்கள் நாயைப் பரிசோதித்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாட்கள் கடந்து சென்றாலும் நாயின் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து கொண்டிருந்தது. கடந்த 11ஆம் தேதி ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தது.” என்று தெரிவித்தனர்.
நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர் கூறியது:” கொரோனா நாய்க்கு இருந்தது உண்மைதான். ஆனால் அது கொரோனா வைரஸால் உயிரிழந்தது என்பதை ஏற்க இயலாது. நாயின் ரத்த பரிசோதனையில் லிபோமா என்ற புற்றுநோய் இருப்பது தெரிகிறது” எனக் கூறினார். நாயின் உடலை பெற்று உடற்கூறு ஆய்வுக்காக ஏற்பாடுகள் செய்ய ஆயத்தம் ஆயின. ஆனால் அதற்குள் நாயின் உரிமையாளர்கள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி நாயை எரித்து விட்டதாக, நியூயார்க் நகர சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். அமெரிக்க அரசின் புள்ளி விவரப்படி இதுவரை 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி, ஒரு சிங்கம் போன்றவை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது ஆனால் எந்த மிருகமும் உயிரிழக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது