தமிழத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய பொது முடக்கம் இருக்கும் என்று நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. சில தளர்வுகளை கொடுத்த தமிழக அரசு, கடந்த ஊரடங்கை போல கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தில் திருமண நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமலும், துக்க நிகழ்வுகளில் 20 பேருக்கு மிகாமலும் பங்கேற்கலாம். பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் மது பானங்கள் குடிக்க கூடாது, மாஸ்க் அணிவது கட்டாயம் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.