சிறுமிகளின் ஆபாச படங்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பொறியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு பின்னர் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பொறியாளர் இளவரசன் என்ற நபரை கடலூர் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கடலூர் எஸ்.என்.சாவடிரட்சகர் என்ற நகரில் கண்ணன் என்பவரும் அவரது மகன் இளவரசனும் வசித்து வருகின்றனர். இளவரசன் ஒரு பொறியாளர். அவர் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுது பார்க்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவர் சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு பின்னர் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றவர்களுக்கும் அவருடைய செல்போன் மூலமாக அனுப்பி இருக்கின்றார்.இதனை தேசிய குழந்தைகள் பாலியல் தடுப்பு மைய அதிகாரிகள் கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை குழந்தைகள் நல குழுவுக்கு உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக கடலூர் சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் இத்தகைய சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் இளவரசனை கைது செய்துள்ளனர்.