Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…காரிய தாமதம் உண்டாகும்…மனஅமைதி ஏற்படும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!    இன்று சிலர் சுய லாபத்திற்காக உழைப்பதற்கு உங்களுக்கு முன் வருவார்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு வளர்ச்சியையும் உருவாக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும் மாணவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும்.

குடும்பத்தில் அமைதி கொஞ்சம் குறையலாம். நிதானமாகப் பேசிப் மாற்றம் பெரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். காரியத்தில் தாமதம் உடல் சோர்வு வீண் பகை போன்றவை இருக்கும். அதில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை கண்டிப்பாக மேற்கொள்ளுங்கள். யாரிடமும் இன்று வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.

காதலர்கள் பேச்சில் எப்போதும் போலவே நிதானத்தை கடைபிடியுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால்  எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்டநிறம்: பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |