வறுமையை எதிர்த்து போராட வேண்டுமே தவிர தற்கொலை தீர்வாகாது என அதிலிருந்து மீண்டு வந்த மருந்து விற்பனைப் பிரதிநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் சாதார வீதியை சேர்ந்த 48 வயதான சங்கர ராமன் ஆங்கில மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். கொரோனா எதிரொலியாக விற்பனை மூலம் வரும் கமிஷனை மட்டுமே ஊதியமாக வழங்க முடியும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வாடகை வீட்டில் வசிக்கும் சங்கரராமன் குடும்பத்தை நடத்த முடியாமல் தவிர்த்துள்ளார். மன உளைச்சலால் தற்கொலை எண்ணம் மேலோங்கியதாக கூறும் அவர் மனைவி மற்றும் கல்லூரி படிக்கும் மகன் ஆகியோரை நினைத்து மீண்டுள்ளார்.
பின்னர் போராடியே தீர்வது என முடிவெடுத்த சங்கரராமன் வயதான முதியோர் மற்றும் வெளிவர முடியாதோர்க்கு மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்து வருகிறார். வாட்ஸ்அப் மூலம் உழைப்பை மூலதனமாக்கி அதில் கிடைக்கும் சொற்ப வருவாய் ஆறுதலாக உள்ளது. எனவும் சங்கரராமன் உயிரை மாய்க்கும் எண்ணம் தீர்வல்ல என நம்பிக்கை வித்தாக மாறியுள்ளார்.