Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீடு கட்டாமலேயே வங்கிக் கணக்கில் பணம் எடுப்பதாக புகார்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வந்தவாசி அருகே வெடால் கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பதிமூன்று பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருளர் சமூகத்தை சேர்ந்த அவர்கள் தங்களால் வீடு கட்ட இயலாது என்று கூறியதால் கட்டுமான பணியை ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 75% பணம் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு  உள்ளது.

ஆனால் தூண்கள் மட்டுமே எழுப்பபட்டுள்ளதாக பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். கட்டுமானத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் தரம் இல்லாமல் இருப்பதாக பயனாளிகள் புகார் தெரிவித்துயுள்ளனர். கட்டப்பட்டுள்ள வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நல்ல முறையில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |